azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

It is the youth and youth alone who can set this world right. No nation can stand without its youth. Never underestimate the capabilities of the youth, thinking that they are inexperienced and young. Only the youth are capable of protecting this world. They are endowed with immense power. If they take a firm resolve, they are capable of achieving anything! When they realize their power, they can emancipate nations. You must face all difficulties with forbearance. Accept all trials and tribulations with love. Accept both pleasure and pain with love. Fill your heart with love and not with the poison of evil qualities. Everything is love. The very word ‘love’ is suffused with sweetness. Treat each other with love, converse with each other with love, lead a life full of love and enjoy bliss.
இளைஞர்களால் மட்டுமே இந்த உலகைத் திருத்தி அமைக்க முடியும். இளைஞர்கள் இன்றி எந்த நாடும் தலை நிமிர்ந்து நிற்க இயலாது. அவர்கள் சிறுவர்கள், அனுபவம் போதாது, என்று அவர்களது திறனைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இளைஞர்களுக்கு மட்டுமே இந்த உலகைக் காக்கும் திறமை உள்ளது. அவர்களிடம் அளவற்ற சக்தி உள்ளது. அவர்கள் ஒரு உறுதியான ஸங்கல்பம் எடுத்து விட்டால், எதையும் சாதிக்க வல்லவர்கள். அவர்கள் தங்கள் சக்தியை உணர்ந்து விட்டால்,தேசங்களை முன்னேற்ற முடியும். உங்களது கஷ்டங்களைப் பொறுமையுடன் எதிர் கொள்ள வேண்டும். உங்களது துயரங்களையும் துன்பங்களையும் ப்ரேமையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இன்பம்,துன்பம் இரண்டையும் ப்ரேமையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் இதயங்களை தீய குணங்களல்லாது ப்ரேமையால் நிரப்புங்கள்.அனைத்தும் ப்ரேமையே. ‘ப்ரேமை’ என்ற வார்த்தையே இனிமையில் தோய்ந்ததுதான். அனைவரையும் அன்புடன் நடத்துங்கள், அனைவருடனும் அன்புடன் பேசுங்கள், அன்பு நிறைந்த வாழ்க்கையை நடத்தி, ஆனந்தத்தை அனுபவியுங்கள்.