azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as all parts of the body form one organism, similarly all beings are like various limbs of God. When there is an injury in the leg, it is the eye that sheds tears. The same type of intimate relationship exists between God and all the beings, just as it exists between the different limbs of the body. We must realize that our joys and sorrows are the reflections of our own actions; they are not caused by others. To blame others or God for our sorrows is a big mistake. You are your own witness. Everything in this world is reaction, reflection and resound.
எப்படி அனைத்து அங்கங்களும் ஒன்றிணைந்து,ஒரே உடலாக திகழ்கிறதோ, அது போல, அனைத்து உயிரினங்களும் இறைவனின் அங்கங்கள் போன்றவையே. காலில் அடி பட்டால், கண்கள் தான் கண்ணீர் வடிக்கின்றன. எப்படி உடலில் அனைத்து அங்கங்களுக்குள்ளும் நெருங்கிய உறவு உள்ளதோ, அதே போன்ற நெருங்கிய உறவு இறைவனுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இடையில் உள்ளது. நமது மகிழ்ச்சிகளும், துக்கங்களும் மற்றவர்களால் உண்டாக்கப் பட்டவை அல்ல;அனைத்தும் நமது செயல்களின் பிரதிபலன்களே என்பதே நாம் உணர வேண்டும். நமது துயரங்களுக்கு மற்றவர்களையோ அல்லது இறைவனையோ குறை கூறுவது மிகப் பெரிய தவறாகும். உங்களுக்கு நீங்களே சாட்சி. இந்த உலகில் அனைத்தும் பிரதி செயல், பிரதி பலிப்பு மற்றும் பிரதி ஒலியே.