azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If at present, if you are pure in spirit, then you yourself have caused it. If you are afflicted by misfortune, again, it is assuredly the result of acts done by you. Hence, you must realize that your happiness and good fortune lie in your own hands. If you decide, you can gain happiness and good fortune. Unless you yearn, you cannot earn. So, it is clear that the will inherent in you is beyond all stages and conditions, all formations and transformations. The freedom that it represents, is the result of your past acts. It is powerful, infinitely fruitful and supreme.
தற்சமயம், நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம் நீங்களே. இப்போது, நீங்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள் என்றாலும், அதுவும் நிச்சயமாக நீங்கள் செய்த செயல்களின் பலனே. எனவே, உங்களது மகிழ்ச்சி மற்றும் நன்மை,உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் ஸங்கல்பித்தால்,சந்தோஷம் மற்றும் நற்பலன்களைப் பெற முடியும். நீங்கள் விழையாவிட்டால், உங்களால் எதையும் அடைய முடியாது. எனவே உங்களுள் உறையும் ஸங்கல்பம் , எல்லா நிலைகள், நிபந்தனைகள், அமைப்புக்கள் மற்றும் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகிறது. அது அளிக்கும் சுநந்திரம் உங்களது கடந்த கால செயல்களின் பலனே. அது சக்தி வாய்ந்தது,எல்லையற்ற பலனளிப்பது மற்றும் தலை சிறந்ததும் ஆகும்.