azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

When Bhaktas (devotees) pray to Bhagawan (God) sincerely making all their actions as offering to God, they will certainly receive appropriate grace from the Divine. There are nine types of devotion: Shravanam (listening to the glory of the Lord), Keerthanam (singing), Vishnusmaranam (remembering), Padasevanam (adoration), Vandanam (saluting), Archanam (worshipping), Dasyam (obedient service), Sneham (friendship) and Atmanivedanam (self-surrender). In whichever way you offer worship, God responds in the same way. When you surrender all your actions, you will surely receive His Grace.
எப்போது பக்தர்கள் தங்களது அனைத்து செயல்களையும் இறைவனுக்கு உண்மையிலேயே அர்ப்பணமாக்கிப் பிரார்த்திக்கிறார்களோ, அப்போது இறைவனிடமிருந்து அதற்குத் தகுந்த கருணையைக் கட்டாயம் பெறுவார்கள். பக்தி மார்க்கம் ஒன்பது வகையானது. சிரவணம் (இறைவனின் அருமை பெருமைகளைக் கேட்பது), கீர்த்தனம் (அவன் புகழைப் பாடுவது), விஷ்ணுஸ்மரணம் (இறைச் சிந்தனையில் திளைப்பது), பாதஸேவனம் (அவர் பாதத்திற்கு சேவை செய்வது), வந்தனம் (வணங்குவது), அர்ச்சனம் (பூஜை செய்வது), தாஸ்யம் (பணிவிடை ஆற்றுவது), ஸ்நேகம் (நட்புணர்வு கொள்வது), ஆத்ம நிவேதனம் (தன்னையே அர்ப்பணிப்பது). நீங்கள் எந்த வழியில் துதித்தாலும், இறைவன் அதே வழியில் பதிலளிப்பார். அனைத்து செயல்களையும் நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால், அவரது கருணையை நிச்சயம் பெறுவீர்கள்.