azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Be careful not to discuss the pros and cons of your spiritual practices with all and sundry. If the people consulted are treading another path, they will decry your practice of repetition of the name and meditation and treat them with scant respect. They will look down upon your practices, as if they were very elementary and as if your were but a beginner in school. As a result, you will start doubting the efficacy of your chosen path! You will get concern where earlier you had joy, disgust where earlier you had love. Therefore, reflect within yourself, or approach those who have tasted the nectar of that Name. Do not argue about these things with everyone you meet. The time spent in these disputations is better used in the cultivation of joy through the repeated contemplation of the Name (Nama) and meditation on the Form (Rupa) of the Lord.
உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளின் அம்சங்களைப் பற்றி பலரிடமும் விவாதிப்பதைத் தவிர்ப்பதில் கவனத்துடன் இருங்கள். நீங்கள் விவாதிக்கும் நபர்கள் வேறு ஒரு முறையைப் பின்பற்றுபவராக இருந்தால், உங்கள் முறையான நாமஸ்மரணை, மற்றும் தியானத்தை எள்ளி நகையாடுவதோடு அவற்றை துச்சமாக எண்ணக்கூடும். உங்கள் முறைகளை மிகச் சாதாரணமானதாகக் கருதி, உங்களை ஒரு ஆரம்பப் பள்ளி மாணவர் போலவும் அவர்கள் நடத்தக் கூடும். இதன் பயனால், உங்களது முறையின் பலனளிக்கும் திறன் மீது உங்களுக்கே சந்தேகம் வர ஆரம்பிக்கும். முன்பு ஆனந்தம் இருந்த இடத்தில் கவலையும், பிரேமை இருந்த இடத்தில் வெறுப்பும் உருவாகி விடும். எனவே உங்களுக்குள்ளேயே தீர ஆராய்வதையோ அல்லது அந்த நாமஸ்மரணையின் அமிர்தத்தை அனுபவித்தவர்களை அணுகுவதையோ செய்யுங்கள். நீங்கள் சந்திப்பவர்கள் எல்லோருடனும் இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்காதீர்கள். இந்த விவாதங்களில் செலவிடும் நேரத்தை நாமஸ்மரணையிலும், இறைவனது ரூபத்தைத் தியானிப்பதிலும் பயன்படுத்துவதே மேலானது.