azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

A special feature about Namasmarana (repetition of the Divine Name) is this: it is possible to acquire various Siddhis (occult powers) through Yoga (spiritual practice) and Tapas (penance). And there is every likelihood of the Lord being forgotten when these powers come. Blinded by this pride, a person might even let go of the basic victory won by his/her spiritual practices. This is not the case with remembrance of the Name, repetition of the Name, and meditation; no such dangers beset these paths. These three paths make Prema (Love) grow in people more and more. Through love, Shanti (Peace) is achieved. Once peace of mind is achieved, all other conditions are automatically attained.
நாமஸ்மரணையின் (இறை நாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது) சிறப்பு இதுதான்; தவம் மற்றும் யோகாவின் மூலம் பல விதமான சித்திகளை அடைய இயலும். இப்படிப்பட்ட சக்திகளைப் பெற்றவுடன் இறைவனையே மறந்து விடும் வாய்ப்பு உள்ளது. கண் மூடித்தனமான இந்த கர்வத்தால், தான் பெற்ற இந்த அடிப்படையான வெற்றியைக் கூட ஒருவர் இழக்க நேரிடலாம். ஆனால், இறை நாமத்தை நினைவு கூர்வது, நாமஸ்மரணை மற்றும் தியானத்தின் பாதையில் இத்தகைய அபாயங்கள் இல்லை. இந்த மூன்று வழிகளும்,மனிதர்களிடம் ப்ரேமையை (அன்பை) மேலும் மேலும் வளர்க்கின்றன. ப்ரேமையின் மூலம் சாந்தி (மன அமைதி) கிடைக்கிறது. இத்தகைய மன அமைதி கிடைத்து விட்டால் எல்லா விதமான பலன்களும் தானாகவே வந்தடையும்.