azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Riches are needed to secure any article in the world. With riches, articles are acquired, so it follows that the riches are superior to the articles obtained by means of them, right? With riches, one can get any article, any time. So too, it is by means of the riches of the Divine Name that the article, Divine Form, is to be earned. If the riches of the Divine Name are steadily accumulated, the Lord can be realised through the path of meditation, easily and without difficulty.
இந்த உலகில் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தால் பொருட்களைப் பெற முடியும் என்பதால், செல்வம் அந்தப் பொருட்களை விட உயர்ந்தது என்பதாகிறதல்லவா? செல்வத்தால், ஒருவன் எந்தப் பொருளையும்,எப்போது வேண்டுமானாலும் பெற இயலும். அது போலவே இறை நாமம் என்ற செல்வத்தால், தெய்வீக ரூபத்தைப் பெற வேண்டும். இறை நாமம் என்ற செல்வத்தை முறையாகப் பெருக்கிக் கொண்டால், தியானத்தின் மூலம் சிரமம் இன்றி , எளிதாக இறைவனை உணர முடியும்.