azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

There is oil in the sesame seed. There is butter in milk. There is water underground. There is fire latent in wood. Similarly, the Omnipresent God is in the human body and in the human mind. When one seeks to separate Him and identify Him, one has to make efforts and perform sadhana (spiritual practices). Then, as a consequence of the effort and the sadhana one will realise that God is Oneself and there is no difference between the two. (Sathya Sai Vahini, Chap 12: "Values in Later Texts".)
THERE IS ONLY ONE GOD, HE IS OMNIPRESENT. – BABA
எள்ளில் எண்ணெய் இருக்கிறது. பாலில் வெண்ணெய் இருக்கிறது. நிலத்தடியில் நீர் இருக்கிறது. மரத்தில் அக்னி மறைந்து இருக்கிறது. அதைப் போலவே, எங்கும் நிறைந்த இறைவன் மனித உடலிலும், மனித மனத்திலும் இருக்கிறான். ஒருவர் அவனை தனிப் படுத்தி, இனம் கண்டு கொள்ள வேண்டும் என்றால், ஒருவர் அதற்கான முயற்சிகளையும் ஆன்மிக சாதனையையும் மேற்கொள்ள வேண்டும். பின்னர், அந்த முயற்சி மற்றும் ஆன்மிக சாதனையின் பலனாக, ஒருவர் தானே இறைவன் என்பதையும், இருவருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்வார்.
இறைவன் ஒருவனே. அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன் - பாபா