azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

There is milk in the body of the cow; the milk has ghee (clarified butter) latent in it. But the cow cannot derive any strength through that latent ghee. The milk has to be taken out of the animal, boiled, and a little sour curd poured into it in order to curdle it. Then, when the milk is transformed into curds, it has to be churned and the butter separated and rolled. After this, the butter has to be melted and clarified, only then can ghee be obtained. The ghee thus prepared can be fed to the cow which would make it stronger. So too, God is omnipresent. Yet, He is not easily available or perceivable to individuals unless they undertake the required sadhana (spiritual practices). (Sathya Sai Vahini, Chap 12: "Values in Later Texts")
THERE IS ONLY ONE GOD; HE IS OMNIPRESENT. – BABA
பசுவின் உடலில் பால் இருக்கிறது; பாலில் நெய் மறைந்து இருக்கிறது. ஆனால் பசு, அந்த மறைந்துள்ள நெய்யிலிருந்து எந்த சக்தியையும் பெற முடியாது. பாலை, பசுவிலிருந்து எடுத்து, கொதிக்க வைத்து, அதைத் தோய வைக்க, அதில் கொஞ்சம் புளித்த தயிரைக் கலக்க வேண்டும்.பின்னர், தயிர் தோய்ந்த பிறகு, அதைக் கடைய வேண்டும்; அதிலிருந்து வெண்ணெய் பிரிக்கப் பட்டு உருட்டி எடுக்கப் படும். இதன் பிறகு, வெண்ணெய் உருக்கப் பட்டு, தெளிவாக்கப் பட்டால் மட்டுமே நெய் கிடைக்கும். இவ்வாறு தயார் செய்யப் பட்ட இந்த நெய்யை, அது வலிமை பெறுவதற்காக பசுவுக்கு அளிக்கலாம். அதைப் போலவே, இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். இருந்த போதும், அவர்கள் தேவையான ஆன்மிக சாதனை செய்யாவிடில், இறைவன் மனிதர்களுக்கு எளிதாகக் கிடைப்பவனோ அல்லது கண்டறியக் கூடியவனோ அல்ல.
இறைவன் ஒருவனே. அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன் - பாபா