azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Each actor must be conscious of God's presence behind the screen of maya (illusion); each must be anxious to catch the faintest suggestion He might give, keeping a corner of the eye always on Him and having the ear pitched to catch His voice. Instead of this, if a person forgets the plot and the story (that is to say, the work for which one has come and the duties that appertain thereto), neglects to watch the Presence behind the screen, and simply stands dumb on the stage, the audience will laugh at his folly and charge the person with spoiling the show. For these reasons, every actor who has to play the role of a person on the world stage must first learn the lines well and then, remembering the Lord behind the screen, await His orders. The attention must be on both: the lines one learned for the role and the stage manager’s directions. Meditation alone gives one this concentration and awareness. (Dhyana Vahini, Chap 6: "Meditation Reveals the Eternal and the Non-Eternal")
MAN’S PRIMARY DUTY IS TO UPHOLD THE HUMAN VALUES
OF TRUTH, RIGHTEOUSNESS, PEACE AND LOVE. – BABA
மாயைத் திரைக்குப் பின்னால், இறைவன் இருப்பதை ஒவ்வொரு நடிகரும் ( ஜீவனும் ) உணர்ந்திருக்க வேண்டும்; அவன் தரும் சிறிதளவு பரிந்துரையைக் கூடப் பற்றிக் கொள்வதில் ஒவ்வொருவரும் ஆவலாக இருக்க வேண்டும், தங்களது ஓரக்கண்ணால் அவனைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்; செவிகள் அவனது குரலைக் கூர்ந்து கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு பதிலாக ஒருவர் நாடகக் கருத்து மற்றும் கதையை ( அதாவது, எந்தப் பணிக்காக தான் வந்திருக்கிறோம், அதில் தனது கடமைகள் என்ன என்பதை ) மறந்து, திரைக்குப் பின்னால் இறைவன் இருக்கிறான் என்பதைக் கவனிப்பதை உதாசீனப் படுத்தி, மேடையில் வெறுமனே மௌனமாக நின்று கொண்டு இருந்தால், பார்வையாளர்கள் அவரது முட்டாள் தனத்தைப் பரிகசிப்பதோடு, நாடகத்தைக் கெடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டுவார்கள். இந்தக் காரணங்களுக்காக, உலகம் எனும் மேடையில் ஒரு மனிதனின் பாத்திரத்தை ஏற்று வரும் ஒவ்வொருவரும், முதலில் தனது வசன வரிகளை நன்றாகக் கற்றுக் கொண்டு, பின்னர் திரைக்குப் பின் இறைவன் இருப்பதை நினைவில் கொண்டு, அவனது ஆணைகளுக்காகக் காத்திருக்க வேண்டும். கவனம் இரண்டின் மீதும் இருக்க வேண்டும்: அதாவது அந்தப் பாத்திரத்திற்காகக் கற்றுக் கொண்ட வசனங்கள் மற்றும் மேடை நிர்வாகியின் கட்டளைகள். தியானம் மட்டுமே இந்த மனக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வை ஒருவருக்குத் தர முடியும்.
மனிதனின் முன் முதல் கடமை சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமை
என்ற மனிதப் பண்புகளை நிலை நிறுத்துவதாகும் - பாபா