azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

All living beings are actors on this stage. They make their exit when the curtain is rung down or when their part is over. On that stage, one may play the part of a thief, another may be cast as a king, a third may be a clown, and another a beggar. For all these characters in the play, there is only One who gives the cue! The prompter will not come upon the stage and give the cue in full view of all. If He does so, the drama will not interest anybody. Therefore, standing behind a screen at the back of the stage, He gives the cue to all the actors, regardless of their role — be it dialogue, speech, or song — just when each is in most need of help. In the same way, the Lord is behind the screen on the stage of Prakriti (Creation), giving the cue to all the actors for their various parts. (Dhyana Vahini, Chap 6: "Meditation reveals the Eternal and the Non-Eternal".)
GOD IS IMMANENT IN THE ENTIRE COSMOS LIKE OIL IN SESAME SEED AND BUTTER IN MILK. – BABA
அனைத்து ஜீவராசிகளும் இந்த நாடக மேடையின் நடிகர்களே.திரை மூடியவுடனேயோ அல்லது அவர்களது பாத்திரம் முடிந்தவுடனேயோ, வெளியேறி விடுவார்கள். அந்த மேடையில், ஒருவர் ஒரு திருடனாகவோ, மற்றொருவர் ஒரு அரசனாகவோ, மூன்றாமவர் கோமாளியாகவோ மற்றும் ஒருவர் ஒரு பிச்சைக்காரனாகவோ பாத்திரம் ஏற்று நடிக்கக் கூடும். இந்த நாடகத்தின் அனைத்து பாத்திரங்களுக்கும், ஒரே ஒருவர் தான் நினைவுட்டுபவராக இருப்பார்! இப்படி உந்துதல் அளிப்பவர், மேடைக்கு வந்து அனைவருக்கும் தெரியும் படி நினைவூட்ட மாட்டார். அவர் அப்படிச் செய்தால், நாடகம் எவருக்கும் ரசிக்கும் படி இருக்காது. எனவே, மேடையில் திரைக்குப் பின் நின்று கொண்டு, அவர்களது பாத்திரம் என்னவாக இருந்தாலும், அனைத்து நடிகர்களுக்கும், அது வசனமோ, பேச்சா அல்லது பாட்டோ- ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு மிகவும் தேவைப் படும் போது, நினைவூட்டுவார். அதைப் போலவே, இறைவனும், ப்ருக்ருதி ( படைப்பு ) எனும் மேடையில் திரைக்குப் பின் நின்று கொண்டு, அனைத்து நடிகர்களுக்கும், அவர்களது பாத்திரங்களுக்கு ஏற்றபடி நினைவூட்டுகிறார்.
எள்ளில் எண்ணெய் போலவும், பாலில் வெண்ணெயைப் போலவும், இறைவன் இந்த பிரபஞ்சம் அனைத்திலும் ஊடுருவி இருக்கிறான்- பாபா