azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Karma (action), really speaking, is the practice of Dharma (right conduct). The Upanishads (scriptures) give us guidance on what has to be done and what should be avoided on the spiritual journey. 'Dharmo Rakshati Rakshitah': Dharma protects those who protect it, say the scriptures. If people come forward to foster the sources of Dharma, that good act, by itself, will help foster those who practice it. The scriptures direct us to revere the mother, father, preceptor and guest as God and also, warn us that Truth and Right Conduct should never be neglected. So, they offer clear dos and don’ts. Whatever is conducive to your progress in goodness, accept it; avoid other counsels—thus instruct the scriptures. (Sathya Sai Vahini, Chap 10: "The Yogis".)
LOVE IN ACTION IS RIGHT CONDUCT. – BABA
உண்மையைக் கூற வேண்டும் என்றால், கர்மா என்பது, தர்மத்தைக் கடைப்பிடிப்பதே. ஆன்மிகப் பயணத்தில் நாம் எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு உபநிஷதங்கள் வழி காட்டுகின்றன. ‘’ தர்மோ ரக்ஷதி, ரக்ஷிதஹ ‘’- தர்மத்தைக் காப்பவர்களை தர்மம் காக்கிறது என்கின்றன வேதங்கள். மக்கள் தர்மத்தின் ஆதாரங்களைப் பேண முன் வந்தால், அந்த நல்ல செயலே, அதைக் கடைப்பிடிப்பவர்களைப் பேணிக் காக்கும். வேதங்கள் நம்மை தாய், தந்தை, குரு, மற்றும் விருந்தினரை இறைவனாகப் போற்ற வேண்டும் என்று கற்பிக்கின்றன; மேலும் சத்தியத்தையும், தர்மத்தையும் ஒருபோதும் உதாசீனப் படுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கின்றன. எனவே, அவை, எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பதைத் தெளிவு படுத்துகின்றன. உங்களது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உகந்தவற்றை ஏற்றுக் கொள்; பிற ஆலோசனைகளை தவிர்த்து விடு – இவ்வாறு வேதங்கள் உபதேசிக்கின்றன.
ப்ரேமையுடன் செயலாற்றுவதே தர்மம்- பாபா