azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Everything in this world is ephemeral and transitory; it is here today but may not be here tomorrow. So, if you want to crave something wholeheartedly, seek the Lord, who has no decline. In this transitory life, joy and pain are also perforce temporary. The self-same Lord gives and takes as and when He wishes. Everything is His, so how foolish it is to lament when things belonging to Him are taken back by Him! Therefore, the wise person doesn’t pine over anyone or feel undue attachment to anything. Let all the pining and all the attachment be for the Lord; He alone is eternal, the source of all joy. Love a person as a person, not more. If you love them more, it is a sign that you have been deceived about their real nature. You can behave only for a short time as if the house you have rented is your own! For, as soon as the lease period is over, it passes on to another. (Dhyana Vahini, Chap 6: "Meditation reveals the Eternal and Non-Eternal")
ONLY DIVINE LOVE IS IMMUTABLE AND PERMANENT. – BABA
இந்த உலகின் ஒவ்வொன்றும் தாற்காலிகமானதும், நிலையற்றதும் ஆகும்; அது இன்று இருக்கும், நாளை அது இல்லாமல் போய் விடலாம். எனவே, நீங்கள் முழு மனதாக எதற்காகவும் ஏங்க வேண்டும் என்றால், என்றும் தாழ்வடையாத இறைவனை நாடுங்கள். இந்த நிலையற்ற வாழ்க்கையில் சுகம் மற்றும் துக்கமும் கூட கண்டிப்பாகத் தாற்காலிகமானவையே. அதே இறைவன், தனது விருப்பப்படி கொடுக்கவும், எடுக்கவும் செய்கிறான். அனைத்தும் அவனுடையதே; எனவே, அவனுடைய பொருட்களை, அவனே எடுத்துக் கொள்ளும்போது. அதற்காகப் புலம்புவது எவ்வளவு முட்டாள்தனம்! எனவே, ஞானி எவருக்காக ஏங்கவோ அல்லது எதன் மீதும் அளவுக்கு மீறிய பற்றுதல் கொள்ளுவதோ இல்லை. அனைத்து ஏக்கமும், அனைத்து பற்றுதலும் இறைவன் மீதே இருக்கட்டும்; அவன் மட்டுமே நிரந்தரமானவனும், அனைத்து ஆனந்தத்தின் மூலாதாரமும் ஆவான். ஒரு மனிதனை, மனிதனாக மட்டுமே நேசியுங்கள்; அதற்கு மேல் அல்ல. நீங்கள் அதற்கு மேல் அவர்களை நேசித்தால், அது அவர்களது உண்மையான நிலையைப் பற்றி நீங்கள் ஏமாற்றப் பட்டு விட்டீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். வாடகைக்கு நீங்கள் தங்கியிருக்கும் இல்லம் உங்களுக்கே சொந்தமானது என, சில காலம் மட்டும் தான் நீங்கள் நடந்து கொள்ள முடியும். ஏனெனில், குத்தகை காலம் முடிந்தவுடன், அது வேறு ஒருவரிடம் போய் விடும் !
தெய்வீக ப்ரேமை மட்டுமே மாறாததும், நிரந்தரமானதும் ஆகும் - பாபா