azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If you follow Truth right from this very day, you will certainly become an ideal to the entire country. What is Truth? God's word is Truth. Hence, when you speak and act with the feeling Sarva Karma Bhagavad Preetyartham (All actions are meant only to please God), everything will become Truth. Every thought and feeling emanating from you is a reflection of your inner truth. Unfortunately it gets converted into falsehood by the improper use of the tongue. The tongue is one of the five senses. The senses are the cause of changes in us; they are responsible for the sin or merit we earn. Himsa (violence) is not just limited to harming or hurting others; in fact acting contrary to one's words is also violence. Remember this always: There can be no greater practice of Non-violence than using our tongue in a sacred manner. (Divine Discourse, April 7, 2006.)
THERE IS NO GREATER SPIRITUAL PRACTICE THAN ADHERING
TO THE PRINCIPLES OF TRUTH AND LOVE. – BABA
நீங்கள் இன்றிலிருந்தே சத்தியத்தைப் பின்பற்றினீர்கள் என்றால், நீங்கள், கண்டிப்பாக, இந்த தேசம் அனைத்திற்கும் ஒரு இலட்சிய மனிதராகி விடுவீர்கள். சத்தியம் என்றால் என்ன? இறைவனது சொல்லே சத்தியம். எனவே, நீங்கள் ஸர்வ கர்மா பகவத் ப்ரீத்யார்த்தம் (அனைத்து செயல்களும் இறைவனை மகிழ்விப்பதற்காக மட்டுமே) என்ற உணர்வோடு பேசிச் செயல் பட்டால், அனத்தும் சத்தியம் ஆகி விடும். உங்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிந்தனை மற்றும் உணர்வும் உங்களது அக சத்தியத்தின் ஒரு பிரதிபலிப்பே. துரதிருஷ்ட வசமாக, நாக்கின் முறையற்ற பயன்பாட்டால், அது பொய்மையாக மாறி விடுகிறது. நாக்கு, ஐம்புலன்களில் ஒன்று.புலன்களே நம்முள் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணம்; அவைகளே நாம் செய்யும் புண்ணியம் அல்லது பாவத்திற்குப் பொறுப்பானவை. ஹிம்ஸா (வன்முறை) என்பது பிறரைத் துன்புறுத்துவது அல்லது காயப்படுத்துவது என்பது மட்டும் அல்ல; உண்மையில் ஒருவர் தனது வார்த்தைகளுக்கு மாறாக செயல்படுவதும் கூட வன்முறையே. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; நமது நாக்கை ஒரு புனிதமான முறையில் பயன்படுத்துவதை விட சிறந்த, அஹிம்ஸையின் கடைப்பிடிப்பு வேறு எதுவும் இல்லை.
சத்யத்தையும், ப்ரேமையையும் பற்றி ஒழுவதைவிடச்
சிறந்த ஆன்மீக சாதனை வேறு எதுவும் இல்லை- பாபா