azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Dwell always on noble thoughts. When air fills a balloon, it takes the form of the balloon. The mind assumes the form of the objects with which it is attached. If it gets fixed on petty things, it becomes petty; similarly, thinking about grand things, it becomes grand. The camera takes a picture of whatever it is pointed at; so take care before you click. Discriminate before you develop attachment. When you develop attachment towards family, wealth, properties, etc., you will come to grief when these decline. But if you develop attachment towards God, you will grow in love and splendour. (Divine Discourse, January 29, 1965.)
YAD BHAVAM, TAT BHAVATHI - AS YOU THINK, SO YOU BECOME. – BABA
எப்போதும் சீரிய சிந்தனைகளிலேயே ஆழ்ந்திருங்கள்.ஒரு பலூனில் காற்று நிரம்பும்போது, அது, பலூனின் ரூபத்தை எடுத்துக் கொள்கிறது. மனமும், அது பற்றுதல் வைக்கும் பொருட்களின் ரூபத்தை ஏற்றுக் கொள்கிறது. அது அற்பமான பொருட்களில் நிலை கொள்ளும் போது, அதுவும் அற்பமானதாகி விடுகிறது; அதைப் போலவே,மகத்தான விஷயங்களை சிந்திக்கும் போது, அதுவும் மகத்தானதாகி விடுகிறது. எதை நோக்கி அது வைக்கப் படுகிறதோ, அதன் படத்தை காமிரா எடுத்து விடுகிறது; எனவே, அதை க்ளிக் செய்யும் முன்பு கவனமாக இருங்கள்.பற்றுதல் கொள்ளும் முன் பகுத்தாராயுங்கள். நீங்கள் குடும்பம், செல்வம், சொத்துக்கள் போன்றவற்றின் மீது பற்றுதலை வளர்த்துக் கொண்டால், அவை வீழ்ச்சி அடையும் போது, நீங்கள் துக்கமடைந்து விடுகிறீர்கள். ஆனால், இறைவன் பால் பற்றுதலை வளர்த்துக் கொண்டால், நீங்கள் ப்ரேமை மற்றும் காந்தியில் வளர்ச்சி அடைவீர்கள்.
யத் பாவம், தத் பவதி- நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ,
அவ்வாறே ஆகிறீர்கள்- பாபா