azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

It is pure love that bestows liberation. You should endeavour to attain this holistic love. To attain liberation, people undertake all sorts of spiritual practices, but love is the undercurrent of all spiritual endeavours. Bhakthi (devotion) is a spiritual practice based on love. Devotion is not merely singing bhajans or performing sacred rituals. True devotion is the direct flow of selfless and unconditional love from your heart to God. In the spiritual practices that people undertake, there is some amount of selfishness. Offer your love to God devoid of the least trace of selfishness or desire. The annihilation of desire is verily liberation. (Divine Discourse, May 21, 2000)
REMOVAL OF IMMORALITY IS THE ONLY WAY TO IMMORTALITY. – BABA
பரிசுத்தமான ப்ரேமையே மோக்ஷத்தை அளிக்கிறது.இந்த ஒருங்கிணைந்த ப்ரேமையைப் பெறுவதற்கு நீங்கள் முயல வேண்டும். மோக்ஷத்தை அடைவதற்கு மனிதர்கள் அனைத்து விதமான ஆன்மிக சாதனைகளை மேற்கொள்ளுகிறார்கள்; ஆனால், ப்ரேமையே அனைத்து ஆன்மிக சாதனைகளின் அடிப்படை உணர்வாகும்.பக்தி, ப்ரேமையை ஆதாரமாகக் கொண்ட ஒரு ஆன்மிக சாதனையே. பக்தி என்பது வெறும் பஜனைகளைப் பாடுவது அல்லது புனிதமான சடங்குகளை செய்வது என்பதல்ல. உண்மையான பக்தி என்பது தன்னலமற்ற மற்றும் நிபந்தனையற்ற ப்ரேமை, நேரடியாக உங்களது இதயத்திலிருந்து இறைவனை நோக்கிப் பாய்வதே ஆகும். மக்கள் மேற்கொள்ளும் ஆன்மிக சாதனைகளில் ஓரளவு சுயநலம் இருக்கிறது. கொஞ்சம் கூட சுயநலம் அல்லது ஆசையின் சுவடே இல்லாத உங்களது ப்ரேமையை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். மோஹங்களின் அழிவே உண்மையில் மோக்ஷமாகும்.
ஒழுக்கக்கேட்டை நீக்குவதே, அமரத்துவத்திற்கான ஒரே வழியாகும் -பாபா