azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Godhead expressed itself initially as the five elements: ether, air, fire, water and earth. All creation is but a combination of two or more of these in varying proportions. The characteristic natures of these five elements are: sound, touch, form, taste and smell, cognized by the ears, the skin, the eyes, the tongue and the nose. Now, since these are saturated with the divine, one has to use them reverentially, with humility and gratitude. Use them intelligently to promote the welfare of others and yourself; use them with moderation and in loving service of society. (Sathya Sai Speaks, Vol-6, Ch-28.)
THERE IS ONLY ONE GOD AND HE IS OMNIPRESENT. – BABA
தெய்வீகம், ஆரம்பத்தில்,பஞ்ச பூதங்களான, வெளி,காற்று, நெருப்பு, நீர் மற்றும் மண் ஆகத் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டது. சிருஷ்ட்டி அனைத்தும், வேறுபட்ட விகிதாசாரங்களில் இவற்றின் இரண்டு அல்லது அதற்கு மேலானவற்றின் இணைப்பே.இந்த பஞ்சபூதங்களின் குணங்கள்; காதுகள்,தோல், கண்கள், நாக்கு மற்றும் மூக்கினால் உணரப்படும் முறையே ஓசை, தொடுதல், ரூபம், ருசி மற்றும் மணம் ஆகியவையே. இப்போது, இவை தெய்வீகத்தில் தோய்ந்திருப்பதால், இவற்றை ஒருவர் பயபக்தியுடனும், பணிவுடனும், நன்றி உணர்வுடனும் பயன்படுத்த வேண்டும். பிறரது மற்றும் உங்களுடைய நலனைப் பேணும் வண்ணம் அவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்; அவற்றை மிதமாகவும், சமுதாயத்தின் ப்ரேமையுடனான சேவையிலும் பயன்படுத்துங்கள்.
இறைவன் ஒருவனே; அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்- பாபா