azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Dharma is universal. There is a test that may be applied to any action to determine if it is according to Dharma. Let not your deeds harm or injure another. This flows from the recognition that the divine spark is the same in every form, and if you injure another you are injuring the same divinity that is in yourself. Dharma enables you to realise that anything that is bad for another is also bad for you. The test of Dharmic action is stated very clearly in the saying: "Do unto others as you would have them do unto you". (Conversations with Bhagawan Sri Sathya Sai Baba'.)
LOVE IN ACTION IS RIGHTEOUSNESS. – BABA
தர்மம் பிரபஞ்சம் அனைத்திற்கும் ஒன்றே. எந்தச் செயலும் தார்மிகமானதா என்பதை முடிவு செய்ய, ஒரு பரீட்சை இருக்கிறது. உங்களது செயல்கள் எவரையும் துன்புறுத்தவோ அல்லது காயப்படுத்தவோ வேண்டாம். ஒவ்வொரு ரூபத்திலும் இருக்கும் தெய்வீகக் கீற்று ஒன்றே தான் மற்றும் நீங்கள் ஒருவரைக் காயப்படுத்தினால், நீங்கள் உங்களுள்ளேயே இருக்கும் தெய்வீகத்தைத் தான் காயப்படுத்துகிறீர்கள், என்ற உணர்விலிருந்து இது எழுகிறது. எது மற்றவருக்குத் தீமையானதோ, அது உங்களுக்கும் தீமையானதே என்பதை தர்மம் உணர வைக்கிறது. ‘’ உங்களுக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ, அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள்‘’ என்ற கூற்றில், தார்மிகமான செயலுக்கான பரீட்சை வெகு தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
ப்ரேமையை செயலில் காட்டுவதே தர்மம் - பாபா