azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Cultivate the atmosphere of love and cooperation, and you can ensure joy forever more. Seek ways of working together for the common good. Ahamkaram and Mamakaram - the sense of ‘I’ and ‘mine’ - these prevent love and cooperation. Reduce them to the minimum and then start serving the needy and the distressed. Service is best built on the strong foundation of Tat Tvam Asi (That thou art). There is no other, there is only One. Many kites fly high, but the same air keeps all of them aloft. The pots of water in which the Sun is reflected may be many, but the Sun remains unaffected even when the pots break or the water is dried up. Understand that all help you render is therefore help given to yourself; all service is to the Self alone. (Divine Discourse, Feb 23, 2009.)
SERVICE IS THE HIGHEST FORM OF WORSHIP AND THE BEST PENANCE. – BABA
ப்ரேமை மற்றும் ஒத்துழைப்பின் சூழ்நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நிரந்தரமான ஆனந்தத்தை மேலும் உறுதி செய்ய முடியும். பொது நன்மைக்காக இணைந்து பணியாற்றும் வழிகளை நாடுங்கள். அஹங்காரம் மற்றும் மமகாரம் – அதாவது ‘’ நான்’’, ‘’ எனது ‘’ , இவையே ப்ரேமை மற்றும் ஒத்துழைப்பைத் தடுக்கின்றன. இவற்றை முடிந்த அளவு குறைத்துக் கொண்டு, பின்னர், ஏழைகளுக்கும், துன்புற்றவர்களுக்கும் சேவை செய்யத் தொடங்குங்கள். சேவையை, தத் த்வம் அஸி ( அது நீயே தான்) என்பதன் வலுவான அஸ்திவாரத்தின் மீது தான் சிறப்பாக அமைக்க முடியும். மற்றவர் என்று எதுவுமே இல்லை, இருப்பது ஒன்றே ஒன்று தான். பல பட்டங்கள் உயரப் பறக்கின்றன; ஆனால் ஒரே காற்றுதான் அவை அனைத்தையும் உயர்த்தி வைக்கிறது. சூரியன் பிரதிபலிக்கும் பானைகளில் இருக்கும் நீர் பலவாக இருக்கலாம்; ஆனால், அந்தப் பானைகள் உடைந்தாலோ அல்லது அந்த நீர் வற்றி விட்டாலோ, சூரியன் எந்த பாதிப்பும் இன்றி இருக்கிறது. எனவே, நீங்கள் அளிக்கும் உதவி அனைத்தும், உங்களுக்கே அளித்துக் கொண்ட உதவி தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; அனைத்து சேவையும் ஆத்மாவிற்கு மட்டுமே.
சேவையே, தலைசிறந்த வழிபாடும், மிகச் சிறந்த தவமும் ஆகும் - பாபா