azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Atma is like the control room. Once you gain access to the ‘control room’, all your senses and the mind will be under your control. When the main switch of the house is turned on, the bulbs in all the rooms automatically glow. The Atma is like the main switch and the senses are like the bulbs in different rooms. These rooms are of your own making. Each room is separated from the other by a wall. Once the walls are demolished, only one big hall remains. Body attachment is like the wall that separates one from the other and which comes in the way of realizing the Self. Once this wall is broken down, you will realize the infinite and immortal Self. (Sathya Sai Speaks, Vol-35, Ch-1.)
THE SANCTIFICATION OF THE FIVE SENSES IS THE WAY TO TRUTH. – BABA
ஆத்மா என்பது ஒரு கட்டுப்பாட்டு அறை போன்றது.நீங்கள் ‘’ கட்டுப் பாட்டு அறைக்குள் ‘’ ஒரு முறை நுழைந்து விட்டால், உங்களது அனைத்து புலன்களும், மனமும், உங்களது கட்டுப் பாட்டுக்குள் வந்து விடும். வீட்டின் மெயின் ஸ்விட்சைப் போட்டால், அனைத்து அறைகளிலும் உள்ள பல்புகள் எரியும். ஆத்மா மெயின் ஸ்விட்சைப் போன்றது, புலன்கள் வெவ்வேறு அறைகளில் உள்ள பல்புகள் போன்றவை. இந்த அறைகள் நீங்களே உருவாக்கியவை. ஒவ்வொரு அறையும் மற்றவற்றிலிருந்து ஒரு சுவரால் பிரிக்கப் பட்டு இருக்கும். ஒரு முறை சுவர்களை இடித்து விட்டால், ஒரு பெரிய அறை மட்டுமே மிஞ்சி இருக்கும். உடல் பற்றுதலே, ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கும் சுவர் போன்றது; இதுவே ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுவதற்குத் தடையாக இருக்கிறது. ஒரு முறை இந்தச் சுவரைத் தகர்த்து விட்டால், நீங்கள் அளவற்ற, அமரத்துவமான ஆத்மாவை உணர்வீர்கள்.
ஐம்புலன்களைப் புனிதப்படுத்துவதே,சத்தியத்திற்கான வழியாகும்- பாபா